திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்


திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:46 PM GMT)

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார். மன்றப்பொருளை மேலாளர் அருணா வாசித்தார். அப்போது ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பையா பேசும் போது, லாடனேந்தலில் 6 மின்கம்பங்கள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. அதே போல் கண்மாய்க்கரை அருகே டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது போல் உள்ளது. மின்சார அதிகாரிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஒன்றிய குழு உறுப்பினர் ராமு ேபசும் போது, அரசின் திட்டப் பணிகள் நடைபெற மின்வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். ஒன்றிய குழு தலைவர் சின்னையா பேசும் போது, தூதை விலக்கு அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் போன் செய்தால் பதில் கிடைப்பதில்லை என்றார்.. ஒன்றிய குழு கூட்டத்திற்கு மின்வாரிய அதிகாரிகள், சுகாதார துறையினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story