சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை மந்தரி அமித்ஷா


சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை மந்தரி அமித்ஷா
x

தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார்.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார். அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்களை மத்திய மந்திரி அமித்ஷா சந்திக்கிறார். தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, சீனிவாசன், பி.ஆர்.ராஜன், பிரித்தா ரெட்டி, பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரை மத்திய மந்திரி அமித்ஷா சந்திக்க உள்ளார்.

மேலும், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், திரைப்பட இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன் உள்ளிட்ட 24 பிரபலங்கள் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கின்றனர்.


Next Story