திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்


திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
x

திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் பழமை வாய்ந்த அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன் உட்பட பா.ஜ.க. நிர்வாகிகள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்களுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் சுற்றுசுவரில் உள்ள கல்வெட்டுக்களை பார்வையிட்டனர். மேலும் கோவிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தனர். இதனை தெடர்ந்து கோவில் வளாகத்தில் மூலிகை செடிகளை நட்டனர். கோவில் வெளிப்புறத்தில் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்ற பள்ளி மாணவர் திருமுக்கூடல் கிராமத்திற்கு முறையான பஸ் வசதி தேவை என்று தெரிவித்தார். அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story