பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்திற்கு மத்திய மந்திரி வி.கே.சிங் மரியாதை


பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்திற்கு மத்திய மந்திரி வி.கே.சிங் மரியாதை
x

பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்திற்கு மத்திய மந்திரி வி.கே.சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் பஸ்நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் கலந்துகொண்டு பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பா.ஜனதா கட்சியின் நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

* ராதாபுரம் பஸ்நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஹீரா பென் உருவப்படத்துக்கு பா.ஜனதா தெற்கு ஒன்றிய ஊடகப்பிரிவு சார்பில் ராதாபுரம் தெற்கு ஒன்றிய தலைவர் கேசவன், செயலாளர் ராஜா, துணைத்தலைவர் அய்யாத்துரை, மூத்த நிர்வாகி முத்துதுரை, அரசு தொடர்பு பிரிவு தலைவர் மணி, ஊடக பிரிவு தலைவர் காமராஜ், முருகேசன், சண்முகம், அன்டன், சடையப்பன், கணேசன், ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

* வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜனதா கட்சி சார்பில் பஸ்நிலையம் அருகே ஹீரா பென் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் பஞ்சாயத்து தலைவர் ராம்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமராஜா, பாண்டித்துரை, மாவட்ட நிர்வாகிகள் சங்கரநாராயணன், தங்கராஜ், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

* சங்கரன்கோவில் பழைய பஸ்நிலையம் அருகே ஹீரா ெபன் உருவப்படத்துக்கு பா.ஜனதா கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நகர தலைவர் கணேசன், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி, நகர பொருளாளர் மணிகண்டன், நிர்வாகிகள் அந்தோணி ராஜ், காளிமுத்து, குருசாமி, சங்கர், செந்தில் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story