ரூ.2.93 கோடியில் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


ரூ.2.93 கோடியில் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:46 PM GMT)

ரூ.2.93 கோடியில் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.2 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக திறப்பு விழா நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை தொடங்கி வைத்தார். மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பன் (வட்டார ஊராட்சி) வரவேற்றார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன், மாவட்ட திட்ட அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ருத்ரா தேவி சரவணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரதாப், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மகேஷ்குமார், வேலு பாலாஜி, கற்பகம், செல்லப்பன், ஆர்.காந்திமதி, வளர்மதி, எம்.காந்திமதி, வசந்தி, ரேணுகா தேவி, சேகர், மைனாவதி, சவிதா மற்றும் மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவலடி, மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி (கிராம ஊராட்சி) நன்றி கூறினார்.


Next Story