யூனியன் அலுவலகம் முற்றுகை


யூனியன் அலுவலகம் முற்றுகை
x

மானூர் அருகே குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

மானூர்:

நெல்லை - சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள மானூர் யூனியன் அலுவலகம் முன்பு அலவந்தான்குளம் கிராம மக்கள் நேற்று மாலை திரண்டனர். அவர்கள் தங்கள் ஊருக்கு சீரான குடிநீர் வசதி கேட்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மானூர் யூனியன் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். அங்கு வந்த மானூர் போலீசார் மற்றும் யூனியன் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்கள்.

1 More update

Next Story