ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

மத்தியஅரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை ரெயிலடியில் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்தியஅரசை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சேவியர், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ரவி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட செயலாளர் ராஜன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரும் சட்டையில் கருப்பு சின்னம்அணிந்ததுடன், கருப்பு கொடியை கையில் ஏந்தி மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story