எடப்பாடி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை


எடப்பாடி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
x

எடப்பாடி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

எடப்பாடி:

எடப்பாடி அருகே உள்ள மெய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் வீராவு (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது நண்பர்கள் பலர் திருமணமாகி தற்போது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். இதனால் அவர் தனக்கும், திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராவு திடீரென மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மது அருந்தக்கூடாது என வீராவுவை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதன் பின்னர் அவர், திருமணமாகாத ஏக்கத்தில் விஷம் குடித்து விட்டார். இது குறித்து பெற்றோரிடம் கூறி உள்ளார். உடனே அவர்கள் அவரை சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீராவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story