அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிர்வாகி முருகேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பழனிவேல், செல்வராஜ், சுப்பரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும், மாவட்டங்கள் தோறும் செல்பட்டு வரும் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக 18 நல வாரியங்களிலும் ஒரு வாரியம் ஒரே மாதிரியான செயல்பாடு என்ற நடைமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ரேணுகாதேவி, கஸ்தூரி, தெய்வானை, அமிர்தவல்லி, அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மூர்த்தி நன்றி கூறினார்.