பருவம் தவறி பெய்த சாரல் மழையால் நெற்பயிர்கள் சேதம்


பருவம் தவறி பெய்த சாரல் மழையால் நெற்பயிர்கள் சேதம்
x

ராஜபாளையம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

சாரல் மழை

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல்லை சாகுபடி செய்தனர். தற்போது அறுடைக்கு தயார் நிலையில் பயிா்கள் உள்ளன.

இந்த நேரத்தில் இப்பகுதியில் திடீரென பெய்த சாரல் மழையினால் நெற்பயிர்கள் சில இடங்களில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த விளைந்த நெல் பயிர்கள் வயல்களில் மழையால் சாய்ந்து நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இதனால் அறுவடை பாதிப்பு ஏற்பட்டு விளைந்த நெற்பயிர்கள் உதிர தொடங்கியுள்ளது. நெல் விளைச்சல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து இருந்தாலும் இந்த மழையினால் பயிர்கள் சாய்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா கூறியதாவது:-

பருவம் தவறி பெய்த மழையால் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நெற்பயிர்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. எந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் போது மகசூல் இழப்பு ஏற்படும். எனவே பாதிக்கப்பட்ட வயல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த படி நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

ஈரப்பத அளவு

கொள்முதல் நிலையங்களில் நெல் பயிர்களின் ஈரப்பத அளவினை தளர்த்த வேண்டும். அதேபோல அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 800 மூடை வழங்குவதை தளர்த்தி கூடுதல் கொள்முதல் செய்ய வேண்டும்.

நெல் அறுவடை எந்திர கட்டணத்தை 50 சதவீதம் மானியமாக வழங்க வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story