டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம்; அர்ஜூன் சம்பத் பேட்டி
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
திசையன்விளை:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று இரவு திசையன்விளையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
விஷச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது தவரான முன் உதாரணம் திருச்சி கொள்ளிடத்தில் வெள்ளத்தில் சிக்கி 3 மணவர்கள் உயிர் இழந்தனர் மதுரை சித்திரை திருவிழாவில் போதிய பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யாததால் 5 பேர் உயிர் இழந்தனர். அவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். விஷச்சாராய சாவுக்கு முற்றுபுள்ளிவைக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கு வரும் வரை கள்ளுகடைகளை திறக்க வேண்டும். கள்ளை உணவின் ஒரு பாகமாக அறிவிக்கவேண்டும்.
வருகிற 25-ந் தேதி விஷச்சாராய சாவுகளை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட கோரியும், கள்ளுகடைகளை திறக்க கோரியும், தமிழ்நாடு முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெறும். விஷச்சாராய சாவு குறித்து அரசியல் சாசனப்படி கவர்னர் தனது கடமையை செய்கிறார். அவரது கடமையை செய்யவிடாமல் அவருக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில முதன்மை செயலாளர் ஆர்.பி.எஸ்.கார்த்தீசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.