அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தரம் உயர்வு - இன்று ஒப்பந்தம் கையெழுத்து
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது.
சென்னை,
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story