அப்பர் பெருமான் சதய விழா தொடங்கியது


அப்பர் பெருமான் சதய விழா தொடங்கியது
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் பெருமான் சதய விழா தொடங்கியது

கடலூர்

பண்ருட்டி

பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்திரை சதய விழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவிலைச்சனை பெற்ற நிகழ்ச்சியும், திருவடி சூட்ட விண்ணப்பித்த நிகழ்ச்சியும், திருவடி சூட்டிய நிகழ்ச்சியும், நாளை(திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் விலகுவது யார் அம்மையார் நந்தவனத்துக்கு திருநாவுக்கரசரை எழுந்தருளி செய்து நீர் மோர் பானகம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாலையில் தண்ணீர் பந்தல் மடம் தடாகம் சோலை முதலியவைகளை அமைத்திருந்த அப்பூதி அடிகளாரை கண்டு உரையாடி அவருடன் திரு அமுது உண்பதற்குமுன் அவரது மூத்தமகனுக்கு பாம்பின் விஷம் நீக்கிய நிகழ்ச்சியும், நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) திருவாதிரை சிறப்பைவிளக்கி அடியாருடன் திரு அமுது(மகேஸ்வர பூஜை) செய்து அருளிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையடுத்து வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) அடியார்கள் துயர் நீக்க நாள்தோறும் படிக்காசு பெற்ற நிகழ்ச்சியும், திருமறைக்காட்டில் மறை கதவு திறந்தருளிய நிகழ்ச்சியும், 11-ந் தேதி(வியாழக்கிழமை) அன்று தமிழர்களால் மறைக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானை வெளிப்படுத்தி வணங்கிய நிகழ்ச்சியும், நடராஜரை தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும், 12-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பண்ருட்டி லிங்காரெட்டிபாளையம் செல்வவிநாயகர் கோவில்நந்தவனத்தில் சிவபெருமான் பொதிகட்டமுது சோறு தந்தருளிய ஐதீக நிகழ்ச்சியும், 13-ந் தேதி(சனிக்கிழமை) பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கயிலை காட்சி தந்தருளும் நிகழ்ச்சியும், உழவார பணியின் போது பொன்னும், மணியும் தோன்ற, அவைகளை கற்களுடன் குளத்தில் எரிந்த நிகழ்ச்சியும், சிவபெருமானால் ஏவிய அரம்பையர்களுக்கு விடை கொடுத்தருளிய நிகழ்ச்சியும், திருப்புகலூரில் முக்தி அடையும் ஐதீக நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி, தக்கார் ஸ்ரீதேவி கட்டளை தாரர்களின் உதவி கொண்டு திருவிழா நடைபெற உள்ளது.


Next Story