வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதால் பரபரப்பு
நாமக்கல்
பரமத்திவேலூர்:-
பரமத்திவேலூர் தாலுகா பகுதிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கோழிப்பண்ணை, வெல்லம் தயாரிக்கும் ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை நடந்த கபிலர்மலை வார சந்தையில் பொருட்களை வாங்க வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 11 பேர் மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களை சாலையில் ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் கபிலர்மலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story