ரெயிலில் 1,306 டன் யூரியா வந்தது
குஜராத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,306 டன் யூரியா தர்மபுரிக்கு வந்தது. இவற்றை தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 2 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
குஜராத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,306 டன் யூரியா தர்மபுரிக்கு வந்தது. இவற்றை தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 2 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
1,306 டன் யூரியா
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட டேன்பெட் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்காக குஜராத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,306 டன் கிரிப்கோ நிறுவனத்தின் யூரியா தர்மபுரி வந்தது. இந்த யூரியா மூட்டைகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இந்த பணியை தர்மபுரி வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் தாம்சன், மாவட்ட டென்பேட் மண்டல மேலாளர்கள் மகாலட்சுமி, மணி, கிரிப்கோ விற்பனை அலுவலர் நாகராஜன் மற்றும் மொத்த விற்பனையாளர் பார்த்திபன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தர்மபுரி மாவட்ட தனியார் உரக்கடைகளுக்கு 100 டன் யூரியா, தர்மபுரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 450 டன் யூரியா, கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் உரக்கடைகளுக்கு 585 டன் யூரியா, கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 171 டன் யூரியா லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது.
அரசு நிர்ணயித்த விலை
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் 7,710 டன் உரங்கள் விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையில் யூரியாவை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.