தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தல்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தல்
x

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பு சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் கணேசன், தனலட்சுமி மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் குடிநீர் வசதி, கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. எனவே இந்த ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். ஸ்டெர்லைட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு ஒரு வல்லுநர் குழு அமைத்து, ஸ்டெர்லைட் ஆலை மீது கூறப்பட்ட புகார்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குழுவின் பரிந்துரையின் படி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். மேலும் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அழுத்தம் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் (அதாவது இன்று) கையேந்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.


Next Story