பண்டரிநாதன் கோவிலில் உறியடி திருவிழா


பண்டரிநாதன் கோவிலில் உறியடி திருவிழா
x

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி திருவிழா நடந்தது.

கரூர்

உறியடி திருவிழா

கரூர் ஜவகர்பஜார் அருகே பழமைவாய்ந்த பண்டரிநாதன் பஜனை மடம் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் உறியடி திருவிழா, வழுக்குமரம் ஏறும் விழா விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு நேற்று பண்டரிநாதன் கோவிலில் 101-ம் ஆண்டு உறியடி திருவிழா, வழுக்குமரம் ஏறும் விழா நடைபெற்றது.இதனையொட்டி பண்டரிநாதனுக்கும், ரகுமாயி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு உறியடி விழாவும், வழுக்குமரம் ஏறும் விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து வாணவேடிக்கையோடு சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. இதில் கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சின்னதாராபுரம்

சின்னதாராபுரம் அருகே உள்ள புஞ்சை காளிகுறிச்சியில் உறியடி வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று சுவாமிக்கு 500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஸ்ரீ உவே ஆசூரி ராமானுஜ சுவாமிகள் கலந்து கொண்டு அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி சொற்பொழிவாற்றினார்.சில குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து பக்தர்கள் கொடி மரத்திற்கு எண்ணெய் விட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story