சாயல்குடி பகுதியில் உறியடி உற்சவம்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சாயல்குடி பகுதியில் உறியடி உற்சவம் நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே இதம்பாடல் கிராமத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு ஊராட்சி தலைவர் மங்களசாமி தலைமை தாங்கினார். இதம்பாடல் யாதவ சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருவிளக்கு பூஜை, கண்ணபிரானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து உறியடி உற்சவம் நடந்தது. இதை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் எஸ்.வாகைக்குளம் ஊராட்சியில் தலைவர் ஜெயலட்சுமி வடமலை தலைமையிலும் யாதவ சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் உறியடி உற்சவம் நடந்தது. சாயல்குடியில் நடைபெற்ற கிருஷ்ணஜெயந்தி விழாவிற்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். சாயல்குடி யாதவ மகாசபை நிர்வாகிகள் சாயல்குடி நகர யாதவ இளைஞர் பேரவை சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியர் விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி, திருவிளக்கு பூஜை பொங்கல் வைத்தல், உறியடி உற்சவம் நடைபெற்றது. இதேபோல் டி. கிருஷ்ணாபுரம், எம்.கிருஷ்ணாபுரம், கருங்குளம், பூதங்குடி, பொதிகுளம், கண்ணன் புதுவன், கோட்டையேந்தல், குருவாடி, கட்டாலங்குளம், இளஞ்செம்பூர், மேலச்சிறு போது, காமாட்சிபுரம், மேலச்செல்வனூர், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.






