அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் 'மிட்ஜெட்' சென்னைக்கு வருகை
மிட்ஜெட் கப்பலின் வருகை, அமெரிக்கா மற்றும் இந்திய கடலோர காவல்படைகள் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சென்னை,
அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான 'யூ.எஸ்.சி.ஜி.சி. மிட்ஜெட்' என்ற கப்பல், 4 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவாட் நாடுகள் மீதான சிறப்பு கவனத்துடன் இந்தோ-பசிபிக் பகுதியை வலுப்படுத்துதல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள கடல்சார் எல்லையை கண்காணித்து பாதுகாப்பதற்கு ஆதரவு அளித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.
418 அடி நீளம் கொண்ட 'யூ.எஸ்.சி.ஜி.சி. மிட்ஜெட்' கப்பலின் வருகை, அமெரிக்கா மற்றும் இந்திய கடலோர காவல்படைகள் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story