திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல்...!
திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உங்களிட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடமையில் மறைத்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை கடத்த இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.