மேற்பனைக்காடு பெண் தற்கொலை வழக்கு: விசாரணை அதிகாரியாக அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு நியமனம்
மேற்பனைக்காடு பெண் தற்கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு நியமனம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் மனைவி கோகிலா (வயது 36). வீட்டு பாதைப்பிரச்சினை புகார் சம்பந்தமாக கோகிலாவை கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்தநிலையில், கடந்த 1-ந்தேதி கோகிலா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, விசாரணை அதிகாரியாக அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story