உத்தரபிரதேச சாமியாரின் உருவபடம் எரிப்பு
உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரபிரதேச சாமியாரின் உருவபடம் எரிப்பு
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். அதை கண்டித்து பொள்ளாச்சி நகர தி.மு.க. சார்பில் அந்த சாமியாரின் உருவபடத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தி.மு.க.வினர் சாமியாரின் உருவபடத்தை எரித்து கோஷம் எழுப்பினர். இதில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ் ணன், நிர்வாகிகள் தர்மராஜ், சுப்பிரமணியம், நாச்சிமுத்து, பாத்திமா மற்றும் மாவட்ட, நகர, இளைஞர் அணி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story