விநாயகர் சதுர்த்தியையொட்டி ராசிபுரம் உழவர் சந்தையில் ரூ.8.60 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

விநாயகர் சதுர்த்தியையொட்டி   ராசிபுரம் உழவர் சந்தையில் ரூ.8.60 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி ராசிபுரம் உழவர் சந்தையில் ரூ.8.60 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் உழவர் சந்தை புதிய பஸ் நிலையம் அருகே நடந்து வருகிறது. நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, நாரைக்கிணறு, மங்களபுரம், ஆயில்பட்டி, முள்ளுக்குறிச்சி, வடுகம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி, கீரை வகைகள், பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி காய்கறி, பழங்கள் அதிக விலைக்கு விற்பனை ஆனது. 48 வகையான காய்கறிகள், கீரை வகைகள், பழங்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 220 விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்திருந்தனர். சுமார் 5 ஆயிரத்து 335 நுகர்வோர் காய்கறிகளை வாங்கி சென்றனர். மொத்தம் ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்து 270-க்கு காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் விற்பனை ஆனதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story