கூட்டுறவு கடன் சங்கங்களில் காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும்; மாநில பதிவாளர் தகவல்


கூட்டுறவு கடன் சங்கங்களில் காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும்; மாநில பதிவாளர் தகவல்
x

கூட்டுறவு கடன் சங்கங்களில் காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் என்று மாநில பதிவாளர் தெரிவித்தார்.

பெரம்பலூர்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சண்முகநாதன் பெரம்பலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தையும், பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவதற்கு உண்டான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும். கூட்டுறவு சங்கங்கள் அனைத்தையும் கணினி மயமாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஏ.டி.எம். மையங்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகள் நடைபெறும் இடங்களில் மட்டுமே ஏ.டி.எம். எந்திரங்களை பொருத்த முடியும் என்பதால் அது குறித்த கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகிறது, என்றார்.


Next Story