காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
மாநில தலைவர் சங்கரப்பெருமாள் தலைமை தாங்கி பேசினார். செயல் தலைவர் எஸ்.செல்வகுமார் முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் ரத்தினகுமார் சங்கத்தின் ஆண்டு செயல்பாடு, எதிர்கால செயல்திட்டங்கள் பற்றி பேசினார்.
மாநில பொருளாளர் சதீஷ் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும்.
காலி பணியிடங்கள்
காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் முதுகலை உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்கள் வழங்கி உடற்கல்வி இயக்குனர் நிலை-2 மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
காலியாக உள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், சிறப்பு ஆசிரியர்களுக்கும் 5 சதவீதம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மனோகரன் நன்றி கூறினார்.