கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்


கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
x

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், நொய்யல் கால்நடை மருத்துவமனையின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒரம்புபாளையம் பகுதியில் கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல உதவி இயக்குனர் அள்ளி அருள்குமாரி முன்னிலை வகித்தார். நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் உஷா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர்.


Next Story