குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்


குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 7 Aug 2023 5:15 AM IST (Updated: 7 Aug 2023 5:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் இன்று முதல் தொடங்குகிறது.

கோயம்புத்தூர்


கோவை


இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏதேனும் செலுத்தப்படாமல் இருந்தால் மிஷன் இந்திர தனுஷ் என்ற முகாமின் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதன்படி கோவை மாவட்டத்தில் இந்த தடுப்பூசி முகாமானது இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை 2-ம் சுற்று முகாமும், அக்டோபர் மாதம் 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 3-ம் சுற்று முகாமும் நடக்கிறது. மேற்கண்ட தேதிகளில் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதுதவிர கர்ப்பிணிகளுக்கு ரணஜன்னி தடுப்பூசி போடப்படுகிறது.


இதனை முன்னிட்டு அனைத்து முகாம்களிலும் தேவையான அளவு தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் பொதுசுகாதாரம் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் துறைகளை சார்ந்த களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். நகர்ப்புறங்களில் உள்ள தற்காலிக குடிசை பகுதிகள், செங்கல் சூளை, மலைப்புற கிராமங்கள் மற்றும் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள கிராமங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோர் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.இந்த தகவலை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா தெரிவித்துள்ளார்.



Next Story