ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம்


ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம்
x

ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வளர்க்கப்படும் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முதல் தொடங்கி ஒருமாத காலத்தில் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

மேலும் கரூர் மாவட்டத்தில் செம்மறி ஆடுகள் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 792, வெள்ளாடுகள் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 249 என மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரத்து 41 ஆடுகளுக்கு 4 லட்சத்து 92 ஆயிரம் டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் போடப்பட உள்ளது. 4 மாதத்திற்கு மேல் உள்ள அனைத்து ஆட்டு குட்டிகளுக்கும் இத்தடுப்பூசியினை போட்டு கொள்ளலாம். இத்தடுப்பூசி முகாம்கள் இந்த மாதம் (அக்டோபர்) 26-ந்தேதி வரை நடைபெறும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.


Next Story