ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் இருந்து 200 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 67 பேரும் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்கிறார்கள். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், நேர்முக உதவியாளர் ரகுபதி, கவுன்சிலர் மன்சூர், தி.மு.க. மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபை சாகுல், முன்னாள் கவுன்சிலர் கமாலுதீன், இளைஞர் அணி மைக்கேல் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் தடுப்பூசி போட்டதுடன், அவர்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை இருக்கிறதா? என்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டது.