சேலம் மாவட்டத்தில் 5,240 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்


சேலம் மாவட்டத்தில் 5,240 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்
x

சேலம் மாவட்டத்தில் 5,240 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது.

சேலம்

சேலம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 240 இடங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. ஊரகப்பகுதியில் 4 ஆயிரத்து 565 இடங்களிலும், சேலம் மாநகராட்சி பகுதியில் 675 இடங்களிலும் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பணியில் 15 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, இதுவரை தடுப்பூசி போடாதவர்களும், ஏற்கனவே முதல் தவணை போட்டவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பூஸ்டர் டோஸ் தகுதியுள்ள நபர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story