உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி


உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி
x

உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பெரம்பலூர்

வெறி நோயின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதனை தடுக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ந்தேதி உலக வெறி நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக வெறி நோய் தடுப்பு தினமான நேற்று தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பெரம்பலூர் கால்நடை மருந்தகம் வளாகத்தில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில், உதவி இயக்குனர் குணசேகர் முன்னிலையில், கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மூலம் பொதுமக்கள் கொண்டு வந்த 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. போலீஸ் மோப்ப நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் முகாமிற்கு பொதுமக்கள் கொண்டு வந்திருந்த பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் பொதுமக்களுக்கு வெறி நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story