வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி


வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி
x

வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக அரசு ஆஸ்பத்திரி சுகாதார துறையினர் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், கிராம சுகாதார செவிலியர் மரகதம், கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் மற்றும் சுகாதார பணியாளர்கள் நேற்று காலை முதல் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் நடமாடும் மருத்துவக்குழுவினர் வயல்வெளிகள் மற்றும் விவசாய பணிகள் நடைபெற்று வரும் இடங்கள், கடை வீதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர்.

1 More update

Next Story