வடபத்ரகாளியம்மன் கோவில் திருநடன வீதியுலா உற்சவம்


வடபத்ரகாளியம்மன் கோவில் திருநடன வீதியுலா உற்சவம்
x

வடபத்ரகாளியம்மன் கோவில் திருநடன வீதியுலா உற்சவம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெருவில் வடபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருநடன வீதியுலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி 70-ம் ஆண்டு திருநடன வீதியுலா உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. 9 நாள் நடக்கும் திருநடன உற்சவம் வடபத்ரகாளியம்மனின் அருளை பெற்ற நபர்கள் விரதம் இருந்து புடவை அணிந்து, கைகளில் வளையல் அணிந்து, கால்களில் சலங்கையுடன் அம்மன் வேடமாக நடனமாடி முக்கிய வீதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று அருள்வாக்கு கூறுவது வழக்கம். 9-ம் நாளான வரும் 6-ந்தேதி வடபத்ரகாளியம்மன் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் கோவிலை வந்தடைவார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story