தேசிய நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை
தேசிய நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
வடக்கன்குளம்:
ஒடிசா மாநிலத்தில் 48-வது தேசிய ஜூனியர் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் மாணவர் ஜோஸ்வா தாமஸ் ஒரு தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றார். மாணவர் பிரவீன்குமார் ஒரு வெண்கல பதக்கம் வென்றார்.
இதேபான்று குஜராத் மாநிலத்தில் நடந்த 38-வது தேசிய சப்-ஜூனியர் நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 3 பேர் பங்கேற்றனர். இவர்களில் மாணவர் தேவதர்ஷன் ஒரு வெள்ளி பதக்கமும், சகாயர் சனிட்டஸ் 3 வெண்கல பதக்கங்களும் வென்றனர்.
சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களான சிக்கந்தர் பாட்ஷா, சிக்கந்தர் சார்ஜன், அஜித் குமார் ஆகியோரை பள்ளி சேர்மன் கிரகாம்பெல், பள்ளி தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையான்டி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.