வடமாடு மஞ்சுவிரட்டு


வடமாடு மஞ்சுவிரட்டு
x

திருவரங்குளம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சி மேல கொல்லையில் வீர முத்தரையர் சங்கத்தின் 13-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். வீர முத்தரையர் சங்க மாநில நிர்வாகி செல்வகுமார் முன்னிலை வகித்தார். திருக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் வரவேற்றார். வடமாடு மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 11 காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் மற்றும் சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டன. விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார ஊராட்சி மன்ற தலைவர்கள், முத்தரையர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story