வடபாதிமங்கலம் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் திறக்கப்படுமா?


வடபாதிமங்கலம் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் திறக்கப்படுமா?
x

வடபாதிமங்கலம் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் திறக்கப்படுமா?

திருவாரூர்

10 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் வடபாதிமங்கலம் நெல்கொள்முதல் நிலைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறந்த வெளியில் அடுக்கி வைக்கும் நிலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் தனியாருக்கு சொந்தமான இடம் நெல்மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு போதுமானதாக இல்லை. இதனால் சாலையோரத்தில் நெல்மூட்டைகளை திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படும் நிலையே உள்ளது. மழை பெய்யும் போது நெல் மூட்டைகள் நனைந்து விடுவதுடன், நெல் மூட்டைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

10 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் கட்டிடம்

இந்த நிலையில் அப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வடபாதிமங்கலத்தில் உள்ள புனவாசல் என்ற இடத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் பல லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குமேல் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.

செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடு இல்லாமலேயே சேதமடைந்து இடிந்து விடும் நிலை ஏற்படுமோ என்று அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

திறக்க வேண்டும்

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் நடப்பாண்டு அறுவடை பணிகள் தொடங்குவதற்கு முன்பாக புதிதாக கட்டப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து உடனடியாக பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story