வடசித்தூர் சோளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
வடசித்தூர் சோளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நபெற்றது.
கோயம்புத்தூர்
நெகமம்
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசித்தூரில் பழமையான சோளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து வர்ணம் பூசப்பட்டு கடந்த மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
இந்த நிலையில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீர்த்த வழிபாடு செய்து, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story