வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரே அதிரும் அரோகரா கோஷம்... குவியும் பக்தர்கள்
வைகாசி விசாக திருவிழா வருகிற 2ம்தேதி கொண்டாடப்பட உள்ளது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 2ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோவிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட இருநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பாதயாத்திரையாக வெகுநேரம் நடந்து வந்து, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்களை எழுப்பியபடி வந்தனர்.
அவர்கள் அங்கபிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story