செஞ்சியில் வைஷ்ணவ மாநாடு


செஞ்சியில் வைஷ்ணவ மாநாடு
x

செஞ்சியில் வைஷ்ணவ மாநாடு நடைபெற்றது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி வட்ட மதுர கவிஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் நடைபெற்றது. இதற்கு வெங்கடேச ராமானுஜதாசர் தலைமை தாங்கினார். பாலாஜி திருமால் துதி பாடினார். காந்தி வரவேற்றார். எத்திராஜ் முன்னிலை வகித்தார். இதில் ராம சீனிவாசன், ராமானுஜ தாசர் கலந்து கொண்டு ராமாயண சாரம் என்னும் பொருள் குறித்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பஜனை கோஷ்டியினர் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தர் நன்றி கூறினார்.


Next Story