வைத்தியலிங்க சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம்


வைத்தியலிங்க சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
x

ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை கோவில் ஆவணி திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனையும், இரவில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. 2-ம் நாளான நேற்று காலை சுவாமி- அம்பாள் ஏக சிம்மாசனத்திலும், இரவு விநாயகர் மூசிச வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனர். தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மண்டகப்படி தீபாராதனை, சுவாமி வீதி உலா நிகழ்வுகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ம் திருநாளான 28-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 11-ம் நாள் சுவாமி- அம்பாள் ரிஷப வாகன காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


Next Story