வலங்கைமான் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம்


வலங்கைமான் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம்
x

வலங்கைமான் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம்

திருவாரூர்

வலங்கைமான் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

எல்லைப்பிடாரி அம்மன் கோவில்

வலங்கைமான் கீழத்தெருவில் பொன்னியம்மன் என்கிற எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எல்லைப்பிடாரி அம்மன் தேரில் எழுந்தருளி கீழத்தெரு, பாய்க்கார தெரு, செட்டி தெரு, கடைத்தெரு, வடக்கு அக்ரஹாரம், உப்புக்கார தெரு, எல்லையம்மன் கோவில் தெரு வழியாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் பக்தர்கள் பால்குடம் உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று(வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மனுக்கு விளையாட்டு விழாவும் நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story