காதலர் தினம்: விற்பனைக்கு குவியும் ரோஜா பூக்கள் - விலை உயர்வு


காதலர் தினம்: விற்பனைக்கு குவியும் ரோஜா பூக்கள் - விலை உயர்வு
x

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

சென்னை,

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட், செல்போன் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.

தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் மூலம் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக காதலர் தின குறுஞ்செய்தி, புகைப்படங்களை அனுப்பினாலும், ரோஜாப்பூ மற்றும் வாழ்த்து அட்டைகளை கொடுப்பது இப்போதும் பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று ரோஜா பூக்களுக்கு மவுசு இருக்கும்.

ரோஜா பூக்கள் விலை உயர்வு

காதலர் தினம் நாளைமறுநாள் கொண்டாடப்படுவதால் ஓசூரில் இருந்து கொண்டுவரப்பட்டு பல வண்ண நிறங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. மேலும் காதலர்களுக்கு பிடித்தமான நிறங்களை அவர்கள் தேர்வு செய்யும் வகையில் ரோஜா பூக்கள் மீது வண்ண நிற ஸ்பிரே அடித்தும் விற்பனையாளர்கள் காதலர்களுக்கு விற்பனை செய்து வருகிறாா்கள்.

நினைத்த நிறத்தில் ரோஜா பூக்கள் கிடைப்பதால் இதை காதலர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கிறார்கள். பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ரோஜா பூக்கள் வரத்து குறைவு, காதலர் தினத்தையொட்டி தேவை அதிகரிப்பு காரணமாக ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.


Next Story