அம்மன் கோவிலில் கோபுர கலசத்தை திருடிய வாலிபர் கைது


அம்மன் கோவிலில் கோபுர கலசத்தை  திருடிய வாலிபர் கைது
x

சூளகிரி அருகே கோவிலில் கோபுர கலசத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

மாரியம்மன் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா அத்திமுகத்தில் மாரியம்மன் கோவில் பூசாரியாக இருப்பவர் நஞ்சுண்டப்பா (வயது 70). இவர் கடந்த 18-ந் தேதி இரவு பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை மெனசன்தொட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (40) என்பவர் கோவில் வழியாக சென்றார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பூசாரி நஞ்சுண்டப்பாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து பேரிகை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

வாலிபர் கைது

அப்போது கோவிலில் இருந்த செம்பு கோபுர கலசம், வெண்கல பொருட்கள் என மொத்தம் 29.5 கிலோ திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கலசம் மற்றும் பொருட்களை திருடியது அதே பகுதியை சேர்ந்த கணேஷ் (27), சூளகிரியை சேர்ந்த அஜித் (27), வினோத் (28) என தெரிய வந்தது. இதில் கணேசை போலீசார் கைது செய்தனர். அஜித் மற்றும் வினோத்தை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story