பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
வால்பாறை,
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
பிளஸ்-1 மாணவி
வால்பாறை அருகே உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 21). இவரது உறவினரான 16 வயது மதிக்கத்தக்க சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். பாலசுப்பிரமணியன், பிளஸ்-1 மாணவியுடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். மேலும் அவரை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார். பாலசுப்பிரமணியன், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
நாளடைவில் மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது, மாணவி தனக்கு நடந்ததை கூறி அழுதாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சமீபத்தில் பிளஸ்-1 மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டது. தொடர்ந்து அவர் ஒரு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் மாணவி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
வாலிபர் கைது
புகாரின் பேரில் வால்பாறை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதை பாலசுப்பிரமணியன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது போலீசார் செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.