வள்ளலார் அருள்மாளிகை அன்பர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வள்ளலார் அருள்மாளிகை அன்பர்கள் ஆர்ப்பாட்டம் திராவிட விடுதலை கழக பேராசிரியரை கைது செய்ய கோரிக்கை
விழுப்புரம்
திருஅருட்பிரகாச வள்ளலாரின் வரலாறு உண்மை தெரியாமல் வள்ளலாரின் பக்தர்கள் மனம் புண்படும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்த திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அரசு என்பவரை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் வள்ளலார் அருள்மாளிகை அன்பர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை மேனேஜிங் டிரஸ்டி ஜெய.அண்ணாமலை தலைமை தாங்கினார். வக்கீல் பொய்கை சங்கர் வரவேற்றார். பெருங்களத்தூர் சிந்தனை மருத்துவர் ஹீஸைன், நல்லசேவிபுரம் சுப்பிரமணிய அடிகளார், திருவண்ணாமலை சாது ஜானகிராமன், சென்னை பாபு, பல்லாவரம் சாதுமகாதேவன், வடலூர் பார்த்திபன், மேட்டுக்குப்பம் புலவர் ஞானதுரை, புதுச்சேரி குஞ்சிதபாதம், தேவியாக்குறிச்சி கண்ணன் அடிகளார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அருள்மாளிகை நிர்வாகிகள் பலராமன், பாரதி, சரவணபவன், வேல்முருகன், சிவக்குமார், சிவ.சக்திவேல், ஆசிரியர் சாது பன்னீர்செல்வம் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் அருள்மாளிகை டிரஸ்டி ராமலிங்கம் நன்றி கூறினார்.