புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி


புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி
x

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடையை அணிந்து ஒயிலாட்டம் ஆடினர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். முன்னதாக மலைக்கோவிலில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story