வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம்


வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம்
x
தினத்தந்தி 26 Jun 2023 10:16 PM IST (Updated: 27 Jun 2023 2:27 PM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையத்தில் வள்ளிக்கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருப்பூர்

பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையத்தில் வள்ளிக்கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். திருப்பூர் தொகுதி கே.சுப்பராயன் எம்.பி., கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. (வடக்கு), க.செல்வராஜ் எம்.எல்.ஏ.(தெற்கு), மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். செல்லமுருகன் பண்பாட்டு மையத்தினர் வள்ளிகும்மியாட்டத்தை ஒருங்கிணைத்தனர். இதில் திருப்பூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த மழலையர் உள்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.


Next Story