இருக்கை வசதி இல்லாத வால்பாறை பஸ் நிலையம்


இருக்கை வசதி இல்லாத வால்பாறை பஸ் நிலையம்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பழைய பஸ் நிலையத்தில் இருக்கை வசதி இல்லை.அங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறை பழைய பஸ் நிலையத்தில் இருக்கை வசதி இல்லை.அங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருக்கை இல்லை

வால்பாறை மெயின் ரோட்டில் பழைய பஸ் நிலையம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான பஸ் நிலையம் ஆகும். இங்கிருந்து கருமலை, அக்காமலை, வெள்ளமலை டாப், ஊசிமலை டாப், ஊசிமலை மட்டம், வெள்ளமலை மட்டம், சோலைப்பாடி, நீரார் அணை ஆகியபகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் கிராமப்புறங்கள், எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்து செல்கின்றனர்.

அப்போது அவர்கள் அமர இருக்கை வசதி இல்லை. இதனால் பயணிகள் கால் கடுக்க நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கின்றனர். ேமலும் குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால் வயதானவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். கருமலை பாலாஜி கோவில், கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம் ஆகிய இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் என பலரும் பஸ்சுக்காக கால் வலிக்க காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.

அடிப்படை வசதிகள்

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

வால்பாறை பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பழைய பஸ் நிலையத்தை உரிய பராமரிப்பு பணி மேற்கொண்டு, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

எனவே, பஸ் பயணிகளுக்கு தேவையான இருக்கை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story