வேன்-கார் கவிழ்ந்தது; 4 பேர் காயம்


வேன்-கார் கவிழ்ந்தது; 4 பேர் காயம்
x

வேன்-கார் கவிழ்ந்தது; 4 பேர் காயம்

திருப்பூர்

அவினாசி

கிருஷ்ணகிரியை சேர்ந்த மாதேஸ் (வயது31) மற்றும் அரவிந்த் (24) ஆகியோர் கோவையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை மாதேஸ் ஓட்டி வந்தார். பைபாஸ் ரோட்டில் அவினாசி வேலாயுதம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அதேசமயம் கோவையிலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வேனுக்கு பின்னால் ஒரு கார் வந்தது. காரை நாகராஜ் (38) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் பாலாஜி என்பவரும் உடன் வந்தார்.வேன் கவிழ்ந்ததை பார்த்து கார் டிரைவர் திடீர் என பிரேக் போட்டதில் காரும் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் இருந்த இருவருக்கும் லோசான காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்த 4 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோட்டில் கவிழ்ந்து கிடந்த கார், மற்றும் வேனை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story