வடபழனியில் வேன் மோதி மாற்றுத்திறனாளி பலி


வடபழனியில் வேன் மோதி மாற்றுத்திறனாளி பலி
x

வடபழனியில் வேன் மோதி மாற்றுத்திறனாளி பலியானார்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37). மாற்றுத்திறனாளியான இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனத்தில் வடபழனி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்திகேயனின் வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story